Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

ADDED : ஜூலை 25, 2024 11:14 PM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:

அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் இந்தாண்டு பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

10ம் வகுப்பு, 8ம் வகுப்பு தேர்வான மாணவர்கள் கடந்த 16ம் தேதி முதல் வரும் 31ம் தேதி வரை நேரடி சேர்க்கை மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் நேரடி சேர்க்கை நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில், அரசு தொழிற்பயிற்சி நிலையம், திண்டிவனம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்பட உள்ளது. இந்த நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவு விபரங்கள் தெரிந்து கொள்ள நேரடியாக சென்று அந்த தொழிற்பயிற்சி நிலையத்தை அணுக வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் நேரடி சேர்க்கையில் சேரும்போது, தங்களின் அசல் ஆவணங்களான மாற்று சான்று, மதிப்பெண், ஜாதி சான்றிதழ், ஆதார், போட்டோ 4, இடப்பெயர்வு சான்றை கொண்டு வர வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய் ஆகும். விண்ணப்பதாரர் நேரடியாக அந்த அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் செலுத்த வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us