ADDED : ஜூலை 16, 2024 12:19 AM

திண்டிவனம்: புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, திண்டிவனத்தில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரே, வழக்கறிஞர்கள்சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும், சென்னையில் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அட்வகேட் அசோசியேஷன் தலைவர் பூபால் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பார் கவுன்சிலர் உறுப்பினர் கோதண்டம், பார் அசோசியேஷன் தலைவர் சண்முகம், வழக்கறிஞர் நலச் சங்க செயலாளர் கிருபாகரன், மூத்த வழக்கறிஞர் விஜயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் 50க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.