/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொழில் முனைவோர் திட்டம் மானியத்துடன் கடன் உதவி தொழில் முனைவோர் திட்டம் மானியத்துடன் கடன் உதவி
தொழில் முனைவோர் திட்டம் மானியத்துடன் கடன் உதவி
தொழில் முனைவோர் திட்டம் மானியத்துடன் கடன் உதவி
தொழில் முனைவோர் திட்டம் மானியத்துடன் கடன் உதவி
ADDED : ஜூலை 26, 2024 11:00 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தில் 4 பேருக்கு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.
வேளாண் இணை இயக்குனர் (பொ) சீனுவாசன் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், வேளாண் துறை மூலம் 2024-25ம் ஆண்டில், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டத்தின் மூலம், வேளாண் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள், வங்கிக் கடனுதவி பெற்று, பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், சுயதொழில் துவங்க 4 இளைஞர்களுக்கு கடன் வழங்கப்படும்.
அதில் பட்டதாரி ஒருவருக்கு, அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது. இதற்கு, 21 முதல் 40 வயதுக்குட்பட்ட வேலையில்லா வேளாண் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். விரும்பும் இளைஞர்கள், வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பதிவேற்றம் மூலம், முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும் மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பயனாளர் வங்கி கணக்கு புத்தகம், வங்கியில் பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் மற்றும் தொழில் குறித்த விபரங்கள் அடங்கிய திட்ட செயலாக்கம் ஆகியவற்றை, அந்தந்த வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அல்லது இணை இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.