/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கிடங்கில் பூட்டி சீல் வைப்பு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கிடங்கில் பூட்டி சீல் வைப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கிடங்கில் பூட்டி சீல் வைப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கிடங்கில் பூட்டி சீல் வைப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கிடங்கில் பூட்டி சீல் வைப்பு
ADDED : ஜூலை 16, 2024 12:24 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 662 ஓட்டு பதிவு இயந்திரங்கள், 357 விவி பேடு, 330 கண்ட்ரோல் யூனிட் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. கடந்த 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் ஓட்டு எண்ணிக்கை மையத்திலிருந்து விழுப்புரம் நுகர் பொருள் வாணிப சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி முன்னிலையில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் யுவராஜ் ஆகியோர் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்ட பெட்டிகள் எண்ணிக்கையை சரிபார்த்து பின்னர் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அறையை பூட்டி சீல் வைத்தனர்.
தேர்தல் தனி தாசில்தார் கணேசன், தலைமையிடத்து துணை தாசில்தார் புருேஷாத்தமன், தனி தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், நாகராஜன், வினோத்குமார், தயாநிதி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.