/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மளிகைக் கடையில் குட்கா வைத்திருந்தவர் கைது மளிகைக் கடையில் குட்கா வைத்திருந்தவர் கைது
மளிகைக் கடையில் குட்கா வைத்திருந்தவர் கைது
மளிகைக் கடையில் குட்கா வைத்திருந்தவர் கைது
மளிகைக் கடையில் குட்கா வைத்திருந்தவர் கைது
ADDED : ஜூன் 27, 2024 11:36 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மளிகைக் கடையில் குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை கம்பன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு வி.மருதுார் பகுதியைச் சேர்ந்த அஷ்ரப்அலி, 59; என்பவரது மளிகை கடையை சோதனை செய்தனர். அங்கு, 95 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 9,474 குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
உடன், குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 22 ஆயிரம் ரூபாய் மற்றும் குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு பைக்கையும் பறிமுதல் செய்து, அஷ்ரப்அலியை கைது செய்தனர்.