Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வேளாண் அறிவியல் நிலையத்தில் நாற்றாங்கால் பயிற்சி

வேளாண் அறிவியல் நிலையத்தில் நாற்றாங்கால் பயிற்சி

வேளாண் அறிவியல் நிலையத்தில் நாற்றாங்கால் பயிற்சி

வேளாண் அறிவியல் நிலையத்தில் நாற்றாங்கால் பயிற்சி

ADDED : ஜூன் 26, 2024 11:07 PM


Google News
திண்டிவனம்: திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நாற்றாங்கால் மற்றும் பூந்தோட்ட பராமரிப்பாளருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்க உள்ளது.

திண்டிவனத்திலுள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் 26 நாட்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நாளை (28 ம் தேதி) தொடங்க உள்ளது.

பயிற்சியில், பழப்பயிர்களில் ஒட்டு கட்டுதல், பதியங்கள் உற்பத்தி, காய்கறி நாற்றுகள் உற்பத்தி, பூந்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல்,புல்த்தரை அமைத்தல், ஒருங்கிணைந்த உரம், நீர், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் பற்றி செயல்முறை விளக்கங்களுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 9ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் பங்கு பெற விரும்புகிறவர்கள் அனைத்த ஆவணங்களுடன் வரும் 27 ம் தேதி வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரிலே அல்லது தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.முதலில் விண்ணப்பிக்கும் 25 நபர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு 8072469453, 9655952629 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us