/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஓய்வூதியர்கள் சங்க பேரவைக் கூட்டம் ஓய்வூதியர்கள் சங்க பேரவைக் கூட்டம்
ஓய்வூதியர்கள் சங்க பேரவைக் கூட்டம்
ஓய்வூதியர்கள் சங்க பேரவைக் கூட்டம்
ஓய்வூதியர்கள் சங்க பேரவைக் கூட்டம்
ADDED : ஜூலை 25, 2024 11:17 PM

வானுார்: விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க வானுார் கோட்ட முதல் பேரைவக் கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்தது
பேரவைத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
இதில், மாவட்ட தலைவர் தாமோதரன், செயலாளர் அறவாழி, மாநில செயற்குழு உறுப்பினர் முருகேசன், துணைத் தலைவர் செங்குட்டுவன், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் முத்துராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கோட்ட பேரவைக்கு உறுப்பினர்களைச் சேர்த்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், வரும் செப்டம்பர் மாதம் மாநில அளவில் நடைபெற உள்ள பேரைவயில் பங்கேற்பது.
பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.