ADDED : ஜூலை 25, 2024 11:19 PM
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி பேரூராட்சியில் குளம் சுத்தம் செய்து மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.
விக்கிரவாண்டி பேரூராட்சி மற்றும் அரபிக் கல்லுாரி கல்விக் குழுமம், தேன்மலர் மகளிர் குழுவினர் சார்பில் பேரூராட்சிகளின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் நடந்த துாய்மைப் பணி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்தீப் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
இளநிலை உதவியாளர் ராஜேஷ் வரவேற்றார். துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம் தலைமையில் கல்லுாரி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் நல்ல தண்ணீர் குளத்தை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றி துாய்மைப் படுத்தி சுற்றிலும் மரக்கன்று நட்டனர்.