/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சி சிறுகடம்பூர் ஈத்கா மைதானத்தில் தொழுகை செஞ்சி சிறுகடம்பூர் ஈத்கா மைதானத்தில் தொழுகை
செஞ்சி சிறுகடம்பூர் ஈத்கா மைதானத்தில் தொழுகை
செஞ்சி சிறுகடம்பூர் ஈத்கா மைதானத்தில் தொழுகை
செஞ்சி சிறுகடம்பூர் ஈத்கா மைதானத்தில் தொழுகை
ADDED : ஜூன் 18, 2024 05:11 AM

செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் ஈத்கா மைதானத்தில் நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டார்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று செஞ்சியில் இஸ்லாமியர்கள் பீரங்கிமேடு பெரிய பள்ளிவாசலில் இருந்து ஜமாத் தலைவர் சையத் மஜீத்பாபு தலைமையில் ஊர்வலமாக செஞ்சி கோட்டை சாதுல்லா கான் மசூதிக்கு வந்தனர். அங்கு பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி சிறுகடம்பூர் கொத்தமங்கலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் கலந்து கொண்டனர்.
திண்டிவனம்: திண்டிவனம் மயிலம் ரோட்டில் வக்பு வாரிய இடத்திலுள்ள கூபா ஈத்கா மைதானம் மற்றும் செஞ்சி ரோட்டிலுள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று காலை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.
இதேபோல் விழுப்புரம் மந்தக்கரை யூமியா ஜாமிஆமஸ்ஜித், பாகர்ஷா வீதி மஸ்ஜித், வி.மருதுார் தக்வாமஸ்ஜித், ரஹ்மான் மஸ்ஜித், நுார்மஸ்ஜித், அபுபக்கர் சித்திக் மசூதி, மதினா மஸ்ஜித் உட்பட பல்வேறு பள்ளிவாசல்களில் நேற்று காலை 7.00 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது.