/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கஞ்சா விற்ற வாலிபர் தடுப்பு காவலில் கைது கஞ்சா விற்ற வாலிபர் தடுப்பு காவலில் கைது
கஞ்சா விற்ற வாலிபர் தடுப்பு காவலில் கைது
கஞ்சா விற்ற வாலிபர் தடுப்பு காவலில் கைது
கஞ்சா விற்ற வாலிபர் தடுப்பு காவலில் கைது
ADDED : ஜூன் 26, 2024 07:21 AM

விழுப்புரம் : கிளியனுார் அருகே கஞ்சா விற்ற வாலிபரை, போலீசார் தடுப்புக் காவலில் கைது செய்தனர்.
கிளியனுார் அடுத்த காட்ராம்பாக்கம் செல்லப்பன் மகன் செல்லகுட்டி (எ) வாஞ்சிநாதன், 21; இவர், கடந்த மே 25ம் தேதி காட்ராம்பாக்கம் சுடுகாடு அருகே கஞ்சா விற்றபோது, கிளியனுார் போலீசார் கைது செய்தனர்.
இவரிடம் இருந்து 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இவர், மீது கஞ்சா வழக்குகள் பல நிலுவையில் உள்ளது. இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, தடுப்புக் காவலில் கைது செய்ய எஸ்.பி., தீபக் சிவாச், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் பழனி உத்தரவின் பேரில், வாஞ்சிநாதனை நேற்று கிளியனுார் போலீசார் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.