ADDED : ஜூன் 27, 2024 11:38 PM
வானுார்: ஆரோவில் அருகே செக்யூரிட்டியை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வானுார், அன்னை நகரைச் சேர்ந்தவர் செல்வம், 46; செக்யூரிட்டி. திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த், 19; இவரது மொபைல் போன் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காணாமல் போனது.
மொபைல் போனை, செல்வம் திருடியதாக ஆனந்து சந்தேகமடைந்தார். நேற்று முன்தினம் இரவு அறையில் இருந்த செல்வத்திடம், ஆனந்து தனது மொபைல் போன் காணாமல் போனது குறித்தும், மறைத்து வைத்திருந்தால் கொடுக்கும் படி கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆனந்த், வைத்திருந்த பீர் பாட்டிலால், செல்வத்தை தாக்கினார். காயமடைந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
செல்வம் அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து ஆனந்த்தை கைது செய்தனர்.