/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு
விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு
விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு
விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு
ADDED : ஜூலை 26, 2024 01:48 AM

விழுப்புரம்:விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், பத்திரங்களை பதிவு செய்ய லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது.
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு 8:00 மணிக்கு, விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து, அலுவலக கதவுகளை மூடிவிட்டு சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த இணை சார் பதிவாளர் (பொறுப்பு) பூங்காவனம் உள்ளிட்ட அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்திரன்.
மேலும், நேற்று பத்திரப்பதிவுக்கு டோக்கன் வழங்கிய விபரம், பதிவு செய்த விபரங்கள், ஆன்லைனின் பதிவேற்றம் செய்த விபரங்களை விசாரித்தனர். சுமார் 2:30 மணி நேரம் நடந்த சோதனையில் கணக்கில் வரா பணம் ரூ.42,000 ஆயிரத்தை பறிமுதல் செய்து கொண்டு இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.
இதே அலுவலகத்தில், கடந்த மே 22ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டில் கணக்கில் வராத ரூ.80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
விஜிலென்ஸ் போலீசாரின் இந்த அதிரடி ரெய்டால் திரு.வி.க., வீதியில் பரபரப்பு நிலவியது.