Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரம் மாவட்ட ரெட்டி நலச் சங்கம் அமைச்சர் பேச்சுக்கு கண்டனம்

விழுப்புரம் மாவட்ட ரெட்டி நலச் சங்கம் அமைச்சர் பேச்சுக்கு கண்டனம்

விழுப்புரம் மாவட்ட ரெட்டி நலச் சங்கம் அமைச்சர் பேச்சுக்கு கண்டனம்

விழுப்புரம் மாவட்ட ரெட்டி நலச் சங்கம் அமைச்சர் பேச்சுக்கு கண்டனம்

ADDED : ஜூன் 27, 2024 11:41 PM


Google News
திண்டிவனம்: ரெட்டி சமூகம் குறித்து அமைச்சர் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கா விட்டால், போராட்டம் நடத்தப்படும் என விழுப்புரம் மாவட்ட ரெட்டி நலச் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ரெட்டி நலச்சங்க விழுப்புரம் வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் அறிக்கை:

கடந்த 26ம் தேதி நடந்த சட்டசபைக் கூட்டத்தில், பிறப்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கையில் பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், ரெட்டி சமூகம் சார்ந்து பேசிய கருத்துகள் எங்கள் மனதை வேதனைக்குள்ளாகியுள்ளது.

இதற்கு சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ரெட்டி சமூகத்தில் 95 சதவீத மக்கள் வறுமையில், நிலையில்லா விவசாய தொழிலை சார்ந்துள்ளனர்.

எனவே அமைச்சர், ரெட்டி சமூகம் குறித்து கூறிய கருத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்.

தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவரை கண்டிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us