/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குந்தலம்பட்டில் குடிநீர் குழாய் அமைக்கப்படுமா? குந்தலம்பட்டில் குடிநீர் குழாய் அமைக்கப்படுமா?
குந்தலம்பட்டில் குடிநீர் குழாய் அமைக்கப்படுமா?
குந்தலம்பட்டில் குடிநீர் குழாய் அமைக்கப்படுமா?
குந்தலம்பட்டில் குடிநீர் குழாய் அமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 16, 2024 12:22 AM
அவலுார்பேட்டை: குந்தலம்பட்டில் குடிநீர் குழாய் வசதி அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல்மலையனுார் ஒன்றியம், குந்தலம்பட்டு கிராமத்தில் அவலுார்பேட்டை - சேத்பட் மெயின் ரோடு பகுதி உள்ளது. இப்பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் இதுவரை ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக 1 கி.மீ., துாரம் செல்லும் நிலை உள்ளது. மக்கள் நலன் கருதி இப்பகுதியில் குடிநீர் குழாய் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.