/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அரசு பஸ் டயர் வெடித்து விபத்து திண்டிவனம் அருகே 10 பேர் காயம்அரசு பஸ் டயர் வெடித்து விபத்து திண்டிவனம் அருகே 10 பேர் காயம்
அரசு பஸ் டயர் வெடித்து விபத்து திண்டிவனம் அருகே 10 பேர் காயம்
அரசு பஸ் டயர் வெடித்து விபத்து திண்டிவனம் அருகே 10 பேர் காயம்
அரசு பஸ் டயர் வெடித்து விபத்து திண்டிவனம் அருகே 10 பேர் காயம்
ADDED : பிப் 06, 2024 06:02 AM

திண்டிவனம், : திண்டிவனம் அருகே புறவழிச்சாலையில் அரசு விரைவு பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து, சாலை தடுப்புகளைத் தாண்டி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 10 பயணிகள் காயமடைந்தனர்.
தஞ்சாவூரிலிருந்து அரசு விரைவு பஸ் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது.பஸ்சை தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுபள்ளி திருஞானசம்பந்தம், 54; ஓட்டினார். சேலம், ஓமலுார் சிவராஜ், 40; கண்டக்டர் பணியில் இருந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணியளவில் திண்டிவனம் - கர்ணாவூர் புறவழிச்சாலை வழியாக வந்த போது, பஸ்சின் முன் வலது பக்க டயர் வெடித்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் டிவைடரைத் தாண்டி எதிர்புறமாக சென்று, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் உட்பட 10 பயணிகள் காயமடைந்தனர். அனைவரும் திண்டிவனம் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய பஸ், கிரேன் மூலம் மீட்கப்பட்டது. விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


