/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரயில் மூலம் 1250 மெ.டன் யூரியா முண்டியம்பாக்கம் வருகை ரயில் மூலம் 1250 மெ.டன் யூரியா முண்டியம்பாக்கம் வருகை
ரயில் மூலம் 1250 மெ.டன் யூரியா முண்டியம்பாக்கம் வருகை
ரயில் மூலம் 1250 மெ.டன் யூரியா முண்டியம்பாக்கம் வருகை
ரயில் மூலம் 1250 மெ.டன் யூரியா முண்டியம்பாக்கம் வருகை
ADDED : ஜூன் 21, 2025 12:53 AM

விழுப்புரம் : முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் ஆந்திராவில்இருந்து 1250 மெ.டன் யூரியா உர மூட்டைகள் வந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் சாகுபடி, உளுந்து, மணிலா, கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்களில் யூரியா 5770 மெ.டன், டி.ஏ.பி., 2096 மெ.டன், பொட்டாஷ் 1481 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 6999 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1608 மெ.டன் ஆகியவை இருப்பு வைத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர, குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பெற்று இருப்பு வைக்கப்படுகிறது. அதன்படி, ஆந்திரா மாநிலம், ராம குண்டத்தில் இருந்து சரக்கு ரயிலில் 1250 மெ. டன் யூரியா உர மூட்டை கள் முண்டியம்பாக்கத்திற்கு நேற்று வந்தது.இதில், விழுப்புரம் மாவட்டத்திற்கு 191.4 மெ.டன், கள்ளக்குறிச்சிக்கு 176.4 மெ.டன், திருவள்ளூருக்கு 151.2 மெ.டன், காஞ்சிபுரத்திற்கு 100.8 மெ.டன், கடலுாருக்கு 478.8 மெ.டன் மற்றும் செங்கல்பட்டுக்கு 151.2 மெ.டன் உர மூட்டைகள் அந்தந்த குடோன்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த உர மூட்டைகளை வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.