ADDED : செப் 18, 2025 11:18 PM
விழுப்புரம்: கூலித்தொழிலாளியை தாக்கிய ரவுடி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், வெங்கடகிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 45; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் நேருஜி சாலையில் உள்ள பங்க் கடையில் சோடா வாங்க சென்றார்.
அப்போது, பவர் ஹவுஸ் சாலையை சேர்ந்த ரவுடி குகன், 28; என்பவர் ரமேஷ் காலை மிதித்துள்ளார். இதை தட்டிக்கேட்ட ரமேைஷ, குகன் மற்றும் பிரேம்குமார், 28; வீரமணிகண்டன், 34; ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கினர்.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து குகன் உள்ளிட்ட மூன்றுபேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.