/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கொத்தடிமை வேலை செய்த 5 தொழிலாளர்கள் மீட்பு கொத்தடிமை வேலை செய்த 5 தொழிலாளர்கள் மீட்பு
கொத்தடிமை வேலை செய்த 5 தொழிலாளர்கள் மீட்பு
கொத்தடிமை வேலை செய்த 5 தொழிலாளர்கள் மீட்பு
கொத்தடிமை வேலை செய்த 5 தொழிலாளர்கள் மீட்பு
ADDED : செப் 25, 2025 12:48 AM
திண்டிவனம்:விழுப்புரம் மாவட்ட கோழிப்பண்ணைகளில், தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக, திண்டிவனம் சப் - கலெக்டர் ஆகாஷிற்கு புகார் வந்தது.
திண்டிவனம் அருகே புலியனுாரில் வாசு என்பவர் குத்தகைக்கு நடத்தி வந்த கோழிப்பண்ணையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், களைக்காட்டூரை சேர்ந்த செல்வம், 55, அவரது மனைவி மாரியம்மாள், 45; குமார் என்பவரது 14 வயது மகள் ஆகியோரை, திண்டிவனம் தாசில்தார் யுவராஜ் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று மீட்டனர்.