/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
விழுப்புரத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
விழுப்புரத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
விழுப்புரத்தில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : அக் 19, 2025 03:21 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் அ.தி.மு.க., 54வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. நகராட்சி திடலில் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். அர்ஜூணன் எம்.எல்.ஏ., வரவேற்றார்.
விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி துவக்க உரையாற்றினார். மாவட்ட அவைத் தலைவர் கண்ணன், இணை செயலாளர் ஆனந்தி, பொருளாளர் வெங்கடேசன், துணை செயலர் நாகம்மாள், ஒன்றிய செயலாளர்கள் முருகன், சுரேஷ்பாபு, ராமதாஸ், கண்ணன், ராஜா, முருகவேல், மாவட்ட மாணவரணி சக்திவேல், மருத்துவரணி முத்தையன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., சிறப்புரையாற்றினார்.
எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் அற்புதவேல், ஜெ.,பேரவை இணை செயலாளர்கள் பாலசுந்தரம், ரகுநாதன், மாவட்ட மகளிரணி தமிழ்செல்வி, வழக்கறிஞரணி ஸ்ரீதர், சகாதேவன், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலர் ஜெகதீஸ்வரி, ஒன்றிய செயலர்கள் முத்தமிழ்செல்வன், பன்னீர், முகுந்தன், நகர செயலர் தீனதயாளன், கனேசன், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர்., மன்றம் தனுசு, ஜானகிராமன், வழக்கறிஞரணி ராதிகா செந்தில், தமிழரசன், இளைஞரணி துணை செயலர் பாலசுப்ரமணியன், இலக்கிய அணி சுதாகர், ஒன்றிய இளைஞரணி ரமேஷ், மாவட்ட பிரதிநிதி ராஜி உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். நகர செயலாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.


