ADDED : பிப் 11, 2024 10:07 PM

விழுப்புரம் : கோலியனுார் ஒன்றியம், அனிச்சம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் கண்மணி கண்ணியப்பன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜனகன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் தேன்மொழி, வார்டு உறுப்பினர் பூங்காவனம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுமதி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சுதா ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில், ஆசிரியர்கள் கலைசெல்வி, சேகர், கமலஸ்ரீ, கவிதா, ஆலிஸ் உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர் பிரபாவதி நன்றி கூறினார்.