ADDED : செப் 25, 2025 03:54 AM

விழுப்புரம் : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் தொல்லியல் கருத்தரங்கம் நடைபெற்றது.
முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வரலாற்று துறை இணை பேராசிரியர் ரங்கநாதன் வரவேற்றார். இணை பேராசிரியர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
தொல்லியல் பொருட்கள் சம்பந்தமான கண்காட்சியை ரவிக்குமார் எம்.பி., திறந்து வைத்து சிறப்புரைாற்றினார். இந்த கண்காட்சியில், தொல்லியல் பொருட்களான பழைய நாணயங்கள், பண்டைய கால வெள்ளி மணிகள், மண்பாண்டங்கள் உள்பட பலவகை பொருட்கள் மாணவ, மாணவியர் பார்வைக்கு வைக்கப்பட்டது.
தொடர்ந்து, தமிழக வரலாற்றை மீட்டெடுக்கும் கல்வெட்டுகள் பற்றி, தமிழக அரசு தொல்லியல் துறையில் ஓய்வு பெற்ற துணை கண்காணிப்பாளர் மார்க்சியகாந்தி கூறினார்.
உதவி பேராசிரியர் ரமேஷ் வாழ்த்தி பேசினார். இதில் வரலாற்று துறை மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் லதாகுமாரி நன்றி கூறினார்.