/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.,வேட்பாளர்கள் டிபாசிட் இழப்பார்கள்: அமைச்சர் ஆருடம்பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.,வேட்பாளர்கள் டிபாசிட் இழப்பார்கள்: அமைச்சர் ஆருடம்
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.,வேட்பாளர்கள் டிபாசிட் இழப்பார்கள்: அமைச்சர் ஆருடம்
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.,வேட்பாளர்கள் டிபாசிட் இழப்பார்கள்: அமைச்சர் ஆருடம்
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.,வேட்பாளர்கள் டிபாசிட் இழப்பார்கள்: அமைச்சர் ஆருடம்
ADDED : பிப் 11, 2024 10:11 PM

திண்டிவனம் : பா.ஜ., ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துவிட்டது என்று அமைச்சர் மஸ்தான் பேசினார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,சார்பில், இளைஞரணி மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம், திண்டிவனம் வ.உ.சி., திடலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
கூட்டத்திற்கு, திண்டிவனம் நகர அவைத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில் சட்டமன்ற கொறடா செழியன், பேச்சாளர் சூர்யாவெற்றிகொண்டான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான் பேசும் போது,''வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.,வேட்பாளர்கள் டிபாசிட் இழப்பார்கள். இதை கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு..க.,சாதித்து காட்டியது. பா.ஜ.,ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துவிட்டது. பா.ஜ.,ஆட்சியில் சிலிண்டர் கேஸ் விலை பன்மடங்காக உயர்ந்துவிட்டது. ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவேன் என்று சொல்லியும், பா.ஜ.,அரசு இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை.
பா.ஜ.,தலைவர் அண்ணாமலை, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை உடன் வைத்துள்ளார். இதிலிருந்து அண்ணாமலையை நம்பி நல்லவர்கள் யாரும் செல்ல விரும்பவில்லை என்று தெரிகிறது'' என பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர், பொருளாளர் ரமணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு, நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், ஒன்றிய சேர்மன்கள் தயாளன், சொக்கலிங்கம், துணை சேர்மன்கள் பழனி, ராஜாரம், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார், விளையாட்டு அணி அமைப்பாளர் சந்திரன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி, கவுன்சிலர் ரேகாநந்தகுமார், நகர பொருளாளர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு அன்சார, நகர துணை செயலாளர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.