/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜைமாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
ADDED : பிப் 11, 2024 10:07 PM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே அய்யன்கோவில்பட்டு கிராமத்தில், திருநங்கைகள் கட்டியுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.
தை கடைசி வெள்ளி மற்றும் அமாவாசை சேர்ந்து வந்ததால், நேற்று முன்தினம் மாலை திருநங்கைகளுக்கான விசேஷ சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில், ஏராளமான திருநங்கைகள் பங்கேற்று, உலக நன்மை மற்றும் மழை வேண்டியும், விவசாயம் பெருகவும் பூஜை செய்து வழிபட்டனர்.
பூஜையினை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் துர்கா வாகினி அமைப்பாளர் புஷ்பா, மாத்ரு சக்தி மாவட்ட அமைப்பாளர் சுபாஷினி, மாவட்ட தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் செய்தனர்.
மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கத் தலைவி ராதா, துணைத் தலைவி விமலா உட்பட ஏராளமான திருநங்கைகள், பெண்கள் பங்கேற்றனர்.