/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு
ADDED : செப் 25, 2025 11:38 PM
விழுப்புரம்: சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த சோழகனுாரைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 35; இவரது உறவினர் சச்சின். இவர், திருவண்ணாமலை சாலையில் மாட்டு பண்ணைக்கு தீவனம் ஏற்றி வந்த வாகனம் மோதிய விபத்தில் இறந்தார்.
இதையடுத்து, அங்குள்ள மாட்டு பண்ணை நடத்தும் நபரை கைது செய்யக்கோரி, சிலம்பரசன் மற்றும் அவரது உறவினர்கள் விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் நேற்று காலை 9:00 மணிமுதல் 9:30 மணி வரை மறியலில் ஈடுபட்டனர்.
காணை போலீசார், சிலம்பரசன் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.