வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்கு
வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்கு
வாலிபரை தாக்கியவர்கள் மீது வழக்கு
ADDED : அக் 03, 2025 07:30 AM
விழுப்புரம்; விழுப்புரம் அருகே வாலிபரை தாக்கிய போதை கும்பல் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அருகே கீழ்முத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்,36; இவர், நேற்று அப்பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அங்கு, அப்பகுதியை சேர்ந்த நவீன், லட்சுமணன், மாதவன், ராஜா ஆகியோர் மதுபோதையில் அசிங்கமாக பேசி கொண்டிருந்தனர்.
இதை வினோத் தட்டி கேட்டதால் நவீன் உட்பட நால்வரும் சேர்ந்து தாக்கியதில் வினோத் காயமடைந்தார்.
புகாரின் பேரில், நவீன் உட்பட 4 பேர் மீதும் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


