Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தந்தை, மகன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு

தந்தை, மகன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு

தந்தை, மகன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு

தந்தை, மகன் மீது தாக்குதல் வாலிபர் மீது வழக்கு

ADDED : அக் 06, 2025 02:03 AM


Google News
விழுப்புரம்: தகராறில் தந்தை, மகனை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த பூத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன், 74; இவரது வீட்டின் சுற்றுசுவரை பக்கத்து வீட்டை சேர்ந்த அருண்குமார், 35; என்பவர் வீடு கழுவிய தண்ணீர் நனைத்துள்ளது. இது குறித்து ஜெயராமன் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த அருண்குமார், ஜெயராமன் மற்றும் அவரது மகன் முருகேசன், 34; ஆகியோரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் அருண்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us