/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/முதல்வர் பிறந்த நாள் எம்.எல்.ஏ., ரத்த தானம்முதல்வர் பிறந்த நாள் எம்.எல்.ஏ., ரத்த தானம்
முதல்வர் பிறந்த நாள் எம்.எல்.ஏ., ரத்த தானம்
முதல்வர் பிறந்த நாள் எம்.எல்.ஏ., ரத்த தானம்
முதல்வர் பிறந்த நாள் எம்.எல்.ஏ., ரத்த தானம்
ADDED : பிப் 29, 2024 11:35 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தி.மு.க., மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஏற்பாட்டில் ரத்த தான முகாம் நடந்தது.
விழுப்புரம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு எம்.எல்.ஏ., லட்சுமணன் தலைமை தாங்கி, ரத்தம் தானமாக வழங்கினார். மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., முகாமை தொடங்கி வைத்தார். 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். கண்டமானடி அரசு மருத்துவமனை ரத்த வங்கி குழுவினர் ரத்த தானம் பெற்றனர்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, நகர்மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, பிரபாகரன், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், பேரூராட்சி செயலாளர் ஜீவா, வழக்கறிஞர் கண்ணப்பன், மாவட்ட கவுன்சிலர்கள் கேசவன், ஹரிராமன், முன்னாள் ஒன்றிய சேர்மன் குப்புசாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தவமணி, மாவட்ட மருத்துவர் அணி செந்தில்குமார், நகர இளைஞரணி மணிகண்டன், கவுன்சிலர்கள் மணவாளன், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு இலவச தையல் இயந்திரம், விளையாட்டு உபகரணங்கள், பறை இசை கருவிகள் ஆகியவற்றை லட்சுமணன் எம்.எல்.ஏ., வழங்கினார்.


