ADDED : அக் 02, 2025 11:02 PM
விழுப்புரம்; வளவனுார் அடுத்த சொர்ணாவூர் கீழ்பாதியைச் சேர்ந்தவர் சம்பத் மகள் ேஹமப்பிரியா, 18; இவர், சேலம் தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.இ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 30ம் தேதி கல்லுாரி விடுமுறைக்கு வீட்டிற்கு வருவதற்காக, சொர்ணாவூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்திறங்கிய ஹேமப்பிரியா வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதுகுறித்து தாய் சுதா அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


