/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாவட்ட தடகள போட்டி பள்ளி மாணவர் தேர்வு மாவட்ட தடகள போட்டி பள்ளி மாணவர் தேர்வு
மாவட்ட தடகள போட்டி பள்ளி மாணவர் தேர்வு
மாவட்ட தடகள போட்டி பள்ளி மாணவர் தேர்வு
மாவட்ட தடகள போட்டி பள்ளி மாணவர் தேர்வு
ADDED : அக் 02, 2025 02:17 AM

விழுப்புரம்: விழுப்புரம் ஜெயேந்திரா பள்ளி மாணவர் யோகராஜ், மாவட்ட தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியில் பிளஸ்2 படிக்கும் மாணவர் யோகராஜ். விழுப்புரம் அடுத்த தும்பூர் கிராமத்தை சேர்ந்த இவர், சிறுவயது முதல் விளையாட்டில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்மணியிடம் பயிற்சி பெற்ற யோகராஜ், 10ம் வகுப்பு படித்தபோது, மாவட்ட கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றார். தற்போது சீனியர் மாணவர்கள் பிரிவில், மண்டல தடகள தொடர் ஓட்டத்தில், மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளாார்.
மாணவர் யோகராஜை பாராட்டி , கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், பள்ளி தாளாளர் பிரகாஷ், பள்ளி செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.


