ADDED : செப் 25, 2025 03:28 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடை பெற்றது.
மேற்கு பிரிவு மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு, மாநில பொதுச்செயலாளர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார்.
செயலாளர் அம்பிகாபதி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மூர்த்தி, மின்ஊழியர் மத்திய அமைப்பு திட்ட தலைவர் சேகர் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர்.
மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிப்படி அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன.
விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் கல்பனா மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 235 நிர்வாகிகளை கைது செய்தனர்.