/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அவலுார்பேட்டை ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி அவலுார்பேட்டை ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
அவலுார்பேட்டை ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
அவலுார்பேட்டை ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
அவலுார்பேட்டை ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 15, 2025 12:28 AM

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை ஏரி நிரம்பி உபரி நீர் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அவலுார்பேட்டை சுற்றுப்பகுதியில் சில தினங்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த 3ம் தேதி 10 செ.மீ., வரை மழை பெய்தது. இந்நிலையில், நேற்று அதிகாலையில் அவலுார்பேட்டை ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இந்த உபரி நீர் மேல்மலையனுார் ஏரிக்கு செல்கிறது.
இதே போல் கடப்பனந்தல், ரவணாம்பட்டு, கொடம்பாடி, பரையம்பட்டு உள்ளிட்ட கிராமங்களின் ஏரிகளும் நிரம்பியது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


