/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பயிர் கடன் திருப்பி செலுத்தும் காலம் விவசாயிகள் கோரிக்கை பயிர் கடன் திருப்பி செலுத்தும் காலம் விவசாயிகள் கோரிக்கை
பயிர் கடன் திருப்பி செலுத்தும் காலம் விவசாயிகள் கோரிக்கை
பயிர் கடன் திருப்பி செலுத்தும் காலம் விவசாயிகள் கோரிக்கை
பயிர் கடன் திருப்பி செலுத்தும் காலம் விவசாயிகள் கோரிக்கை
ADDED : செப் 23, 2025 09:47 PM

செஞ்சி, ; மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் வழங்கப்படும் பயிர்க்கடன்களை திருப்பி செலுத்தும் காலத்தை ஓராண்டாக உயர்த்த விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் சக்திவேல் உள்ளிட்டோர், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நெல்லுக்கான பயிர்க்கடன் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 8 மாதமாக உள்ளது. இதனால் கடன் பெறும் விவசாயிகள், மூன்று போகம் தொடர்ந்து பயிர் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்தும் காலத்தை, 8 மாதத்திலிருந்து 1 ஆண்டாக உயர்த்த வேண்டும்.
மாவட்டம் முழுவதும் ஏராளமான விவசாயிகள் அவுரி தழை சாகுபடி செய்கின்றனர். தற்போது அவரி தழைகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதுகுறித்து இருமுறை வல்லம் ஒருங்கிணைந்து வேளாண் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்பட வில்லை.
ஆகையால் அவுரி விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தவறான வீடியோ பகிர்வினால் தர்பூசணி விலை சரிந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை, நகைகளை மீட்க முடிய வில்லை.
டெல்டா மாவட்டங்களில் செயல்படும் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் ஆண்டு முழுவதும் செயல்படுகிறது.
அதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் ஒன்றியத்துக்கு, 10 நேரடி கொள்முதல் நிலையங்கள் ஆண்டு முழுவதும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது மாவட்டத்தில் சாம்பா நெல் சாகுபடி செய்யும் சூழ்நிலை இருப்பதால் யூரியா தட்டுப்பாடு இல்லாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.