Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விவசாயிகள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

விவசாயிகள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

விவசாயிகள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

விவசாயிகள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

ADDED : ஜன 09, 2024 10:43 PM


Google News
மரக்காணம், -மரக்காணம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் பார்வையிட வராததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது.

மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துார் கிராமத்தில் தர்பூசணி, நெல், வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் கடந்த 8ம் தேதி இரவுமுதல் 9ம் தேதி காலை வரை பெய்த கன மழையால் அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கின.

அதிகாரிகள் தண்ணீர் சூழ்ந்த பயிர்களை நேரில் பார்வையிட வரவில்லை என விவசாயிகள் நேற்று காலை 10:00 மணியளவில் திண்டிவனம் - மரக்காணம் சாலையில் ஆலத்துார் கூட்ரோட்டில் மறியலில் ஈடுபட வந்தனர்.

தகவல் அறிந்து வந்த வேளாண் உதவி இயக்குனர் சரவணன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனைத் தொடர்ந்து 10:15 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us