/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ போக்குவரத்து கழக ஊழியர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி போக்குவரத்து கழக ஊழியர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி
போக்குவரத்து கழக ஊழியர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி
போக்குவரத்து கழக ஊழியர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி
போக்குவரத்து கழக ஊழியர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி
ADDED : மார் 15, 2025 08:31 PM
விழுப்புரம்; விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அனைத்து தொழிற் சங்கங்களின் ஒத்துழைப்புடன், தொழிலாளர்களிடமிருந்தும் பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இந்த பணத்தை விழுப்புரம் மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் பணிபுரிந்து அண்மையில் இறந்த தொழிலாளர்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதியுதவியாக வழங்கப்பட்டது.
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மேலாண் இயக்குநர் குணசேகரன், பொது மேலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், ஊழியர்களின் குடும்பத்தினருக்கு காசோலையாக வழங்கினர்.