/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிறுத்தையை பிடிக்க கூண்டு வனத்துறை நடவடிக்கை சிறுத்தையை பிடிக்க கூண்டு வனத்துறை நடவடிக்கை
சிறுத்தையை பிடிக்க கூண்டு வனத்துறை நடவடிக்கை
சிறுத்தையை பிடிக்க கூண்டு வனத்துறை நடவடிக்கை
சிறுத்தையை பிடிக்க கூண்டு வனத்துறை நடவடிக்கை
ADDED : டிச 02, 2025 07:36 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கிராமத்தில் உலா வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டுகள் வைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
விழுப்புரம் அருகே சகாதேவன்பேட்டை கிராமத்தில் சிறுத்தை வலம் வந்ததாக, அங்குள்ள பொதுமக்கள் கடந்த தினங்களுக்கு முன் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தேடி பார்த்ததில், அங்கு சிறுத்தை நடந்து சென்றதற்கான கால் தடங்கள் மட்டும் சிக்கியது.
இதையடுத்து, வனத்துறையினர் தொடர்ந்து தேடி வந்த நிலையில், சாலையம்பாளையம் கிராமத்தில் மீண்டும் சிறுத்தை நடந்து சென்றதாக முன்னாள் ராணுவ வீரர் பார்த்துள்ளார். இதையறிந்த வனத்துறையினர், அங்கும் சென்று சிறுத்தையை தேடிய நிலையி ல் கண்ணில் தென்படவில்லை. இதையடுத்து, வனத்துறையினர் சாலையம்பாளையம் கிராமத்தில் மூன்று இடங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைத்து கடந்த 2 தினங்களாக கண்காணித்து வருகி ன்றனர்.
சிறுத்தை இதுவரை சிக்காததால், சகாதேவன்பேட்டை, சாலையாம்பாளையம் கிராம மக்கள் வெளியே சுதந்திரமாக வந்து செல்ல முடியாமல் பீதியில் வீடுகளில் முடங்கியுள்ளனர்.


