/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஏரி குளங்கள் துார்வார இந்திய கம்யூ., தீர்மானம் ஏரி குளங்கள் துார்வார இந்திய கம்யூ., தீர்மானம்
ஏரி குளங்கள் துார்வார இந்திய கம்யூ., தீர்மானம்
ஏரி குளங்கள் துார்வார இந்திய கம்யூ., தீர்மானம்
ஏரி குளங்கள் துார்வார இந்திய கம்யூ., தீர்மானம்
ADDED : மே 27, 2025 12:44 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் இந்திய கம்யூ., கட்சி வட்டக்குழு மாநாடு நடந்தது.
தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மாநாட்டிற்கு, வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கலியமூர்த்தி கட்சி கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மாவட்ட நிர்வாக குழு ராஜேந்திரன் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 200 நாள் வேலை, 400 ரூபாய் சம்பளம், கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் வாங்கும் விவசாயிகள் கடன் புதுப்பிக்கும் முறையில் பழைய நடைமுறை அமல் படுத்துவது, விக்கிரவாண்டி வட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களை துார் வாரி சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
நகர செயலாளர் ஜெயபால், வட்ட துணை செயலாளர் ஆனந்தன், பொருளாளர் ஆறுமுகம் , நிர்வாகிகள் ராஜமாணிக்கம், உமாபதி, செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.