/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம் செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம்
செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம்
செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம்
செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம்
ADDED : டிச 04, 2025 05:30 AM

செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.
செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை மகா தீப உற்சவம் நடந்தது.
இதை முன்னிட்டு 15ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், கொடியேற்றமும் நடந்தது. இரவு 7 மணிக்கு ருத்ர ஹோமமும், உற்சவர் கோவில் உலாவும் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பைரவர் ஹோமம், சொர்ணாகர்ஷணமும், உற்சவர் கோவில் உலாவும் நடந்தது.
நேற்று அதிகாலை 4.00 மணிக்கு பரணி தீபம் ஏற்றினர். நேற்று மாலை 5 மணிக்கு அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடந்தன.
6 மணிக்கு மகா தீபம் ஏற்றினர். இதில் அறங்காவலர் இந்திரா ரவிச்சந்திரன், விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


