Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 48 ஆண்டுகளைக் கடந்து முதன்மை பள்ளியாக திகழும் கென்னடி கல்வி நிறுவனங்கள்

48 ஆண்டுகளைக் கடந்து முதன்மை பள்ளியாக திகழும் கென்னடி கல்வி நிறுவனங்கள்

48 ஆண்டுகளைக் கடந்து முதன்மை பள்ளியாக திகழும் கென்னடி கல்வி நிறுவனங்கள்

48 ஆண்டுகளைக் கடந்து முதன்மை பள்ளியாக திகழும் கென்னடி கல்வி நிறுவனங்கள்

ADDED : அக் 01, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
மயிலம் அடுத்த ரெட்டணை கிராமத்தில் கடந்த 48 ஆண்டுகளாக முதன்மை நிறுவனங்களாக திகழும் கென்னடி கல்வி நிறுவனங்களான கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும்கீரின் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளி. கடந்த 1977ம் ஆண்டு 30 மாணவர்களுடன் ரெட்டணையில் துவங்கப்பட்டது.

தாளாளர் சண்முகம் , முதன்மைச் செயலாளர் வனஜா. செயலாளர், நிர்வாக இயக்குனர் மற்றும் ஆசிரியர்களின் உழைப்பால் இன்று 2 பள்ளிகளிலும் 2,500 மாணவர்களை கொண்டு சிறந்த பள்ளிகளாக திகழ்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் பல முறை முதன்மை மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்ததோடு, விளையாட்டு துறையிலும் சாதனை படைத்து வருகிறது.

கிராமப்புற மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வி அளித்திட கடந்த 7 ஆண்டுகளாக கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளி மாநில மற்றும் மத்திய அரசு அங்கீகாரத்துடன் இயங்கி வருகிறது. 2022ம் ஆண்டு, அமெரிக்காவின் CIAA நிறுவனம் இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த பள்ளிகளாக 200 பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அந்த பள்ளிகளுக்கு விருது வழங்கி கரவித்தது. அதில், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே ஒரு பள்ளியாக கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.

திண்டிவனம் வட்டத்திலேயே குளிர்சாதன வசதியுடன் மழலையர் வகுப்புகள், கலந்தாய்வு கூடம், கணினி ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பு, மழலையர் மாணவர்களுக்கு விளையாட்டு கல்வி கொண்ட சிபிஎஸ்இ., பள்ளியாக கிரீன் பாரடைஸ் பள்ளி உள்ளது.

மாணவர்களுக்கு இயற்கை விவசாயம், இசை, கிட்டார், பிரெஞ்சு, இந்தி, அபாகஸ், நடனம், யோகா, கராத்தே உள்ளிட்ட அனைத்து வகுப்புகளும் சிறந்த முறையில் நடக்கிறது.

கென்னடி கல்வி குழும தலைவர் சண்முகத்திற்கு 2021ம் ஆண்டு தமிழக அரசு மற்றும் VIT., பல்கலைகழகம் இணைந்து சிறந்த கல்வியாளர் விருது வழங்கி பெருமைப்படுத்தியது. கென்னடி கல்வி நிறுவனத்தில், கிராமப்புற மக்களுக்கு ஏற்றார் போல் குறைந்த கட்டணத்தில் கல்விச்சேவை அளிப்பதே எங்களின் நோக்கம். தற்போது விஜயதசமி அட்மிஷன் நடைபெறுகிறது என தாளாளர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us