/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கோலியனுார் வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்கோலியனுார் வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கோலியனுார் வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கோலியனுார் வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கோலியனுார் வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 01, 2024 11:40 PM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் ப்ரஹன்நாயகி அம்பிகா சமேத வாலீஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 29ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.
கோ பூஜை, மகாலட்சுமி, நவகிரக ஹோமங்களும், மாலை 4:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும் நடந்தது.
30ம் தேதி மாலை முதல் கால யாகசாலையும், 31ம் தேதி காலை இரண்டாம் கால மற்றும் மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.
தொடர்ந்து, நேற்று காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், ஹோமங்களும், 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:00 மணிக்கு வாலீஸ்வரர் கோவில் விமானம் மற்றும் சித்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகசாமி, சிவகாமி அம்பிகா சமேத நடராஜர், சனிபகவான் மற்றும் பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் லட்சுமணன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., நகர செயலாளர் பசுபதி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் சிவாகரன் முன்னிலை வகித்தனர்.
சிவாச்சாரியார்கள் மோகனசுந்தரசிவம், அஸ்வின்சிவம், சிவக்குமார், கோவில் நிர்வாகிகள் கோலியனுார் சிவஞானம், புஷ்பராஜ் உள்ளிட்ட ஆலய விழாக் குழுவினர், விழா ஏற்பாடுகளை செய்தனர்.
விழுப்புரம், கோலியனுார், வளவனுார் வட்டார பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


