/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மறுவாழ்வு மையத்தில் கூலி தொழிலாளி சாவு மறுவாழ்வு மையத்தில் கூலி தொழிலாளி சாவு
மறுவாழ்வு மையத்தில் கூலி தொழிலாளி சாவு
மறுவாழ்வு மையத்தில் கூலி தொழிலாளி சாவு
மறுவாழ்வு மையத்தில் கூலி தொழிலாளி சாவு
ADDED : அக் 09, 2025 02:25 AM
விழுப்புரம்:மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட கூலி தொழிலாளி, உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்தவர் அசோக்குமார், 27; கூலி தொழிலாளி. மது போதைக்கு அடிமையான இவரை கடந்த, 5ம் தேதி விழுப்புரம் அடுத்த ராமையன்பாளையம் மறுவாழ்வு மையத்தில் அனு மதித்தனர்.
அங்கு நேற்று முன்தினம் அசோக்குமாருக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக் கின்ற னர்.


