/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மயிலம் அரசு பள்ளிகள் நுாறு சதவீத சாதனை மயிலம் அரசு பள்ளிகள் நுாறு சதவீத சாதனை
மயிலம் அரசு பள்ளிகள் நுாறு சதவீத சாதனை
மயிலம் அரசு பள்ளிகள் நுாறு சதவீத சாதனை
மயிலம் அரசு பள்ளிகள் நுாறு சதவீத சாதனை
ADDED : மே 10, 2025 12:35 AM
மயிலம்: மயிலம் ஒன்றியத்தில் 4 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மயிலம், சிவப்பிரகாசர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய 84 மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி மாணவி சோனியா 600க்கு 508, விருந்தா 498, ராகவி 495 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளியின் செயலாளர் விஸ்வநாதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மயிலம் ஒன்றியத்தில் உள்ள அவ்வையார்குப்பம், ஆலகிராமம், அகூர் ஆகிய அரசு பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.


