/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் மேளா சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் மேளா
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் மேளா
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் மேளா
சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் மேளா
ADDED : ஜூலை 02, 2025 06:24 AM
விழுப்புரம் :தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் மேளாக்கள் நடக்கிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கு சிறு தொழில் கடன், கல்வி கடன், கறவை மாடு கடனுதவி வழங்கும் சிறப்பு லோன் மேளா விழுப்புரம் மாவட்டத்தில் நடக்க உள்ளது.
வரும் 9 ம் தேதி விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கி; 16ம் தேதி திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கி; வரும் 23ம் தேதி செஞ்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்; வரும் 30ம் தேதி வீரபாண்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்; வரும் ஆக. 6ம் தேதி முகையூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்; வரும் ஆக. 13ம் தேதி ஆற்காடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்; வரும் ஆக. 20ம் தேதி செம்மேடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்; வரும் செப்., 3ம் தேதி, கண்டாச்சிபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்;
வரும் செப். 10ம் தேதி விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி; அவலுார்பேட்டை கிளையில், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை கடன் மேளா நடக்கிறது.
இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலும் கிடைக்கும்.
முகாமில் கலந்து கொள்ள வரும் முன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து எடுத்து வர வேண்டும். சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, ரேஷன் கார்டு அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.