ADDED : ஜன 22, 2024 12:21 AM

விக்கிரவாண்டி, ஜன. 22-
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று புகழேந்தி எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு செய்தார். அப்போது, வார்டுகள், மகப்பேறு மருத்துவமனை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சாப்பிட்டு ஆய்வு செய்தார்.
பின் மருத்துவமனையில் மேம்பாடுகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஏ.ஆர்.எம்.ஓ., வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம் மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.


