/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கல் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கல்
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கல்
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கல்
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கல்
ADDED : ஜூன் 03, 2025 12:21 AM

செஞ்சி: தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மஸ்தான் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகளை வழங்கினார்.
செஞ்சி அடுத்த சவுட்டூர் கிராமத்தில் பழங்குடியினர் குடியிருப்பில் நேற்று முன்தினம் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பலானது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். தாசில்தார் துரைசெல்வன் முன்னிலை வகித்தார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., பாதிக்கப்பட்ட 3 குடும்பத்தினருக்கு, அரிசி, காய்கறி, நிவாரணத்தொகை வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் புவனா செந்தில் குமரன், சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் சத்யா, வி.ஏ.ஓ., மணிகண்டன், தி.மு.க., ஒன்றிய அவைத் தலைவர் வாசு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.