/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புதிய டிரான்ஸ்பார்மர்கள் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு புதிய டிரான்ஸ்பார்மர்கள் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
புதிய டிரான்ஸ்பார்மர்கள் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
புதிய டிரான்ஸ்பார்மர்கள் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
புதிய டிரான்ஸ்பார்மர்கள் எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
ADDED : மே 11, 2025 11:46 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மூன்று இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர்களை லட்சுமணன் எம்.எல்.ஏ., மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.
விழுப்புரம் சாலாமேடு 38வது வார்டு, ஹவுசிங் போர்டு, என்.ஜி.ஜி.ஓ., காலனி மற்றும் 18வது வார்டு கிழக்கு சண்முகபுரம், மருதுார்மேடு, எம்.எஸ். கார்டன் பகுதியில், தொடர்ந்து குறைந்த மின்னழுத்தம் இருப்பதால், புதிய டிரான்ஸ்பார்மர்களை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை லட்சுமணன் எம்.எல்.ஏ., அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று, புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
தலா 100 கே.வி.ஏ., அளவுள்ள ரூ. 30 லட்சம் மதிப்பிலான 3 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டன. புதிய டிரான்ஸ்பார்மர்களை லட்சுமணன் எம்.எல்.ஏ., மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர சேர்மன் தமிழ்செல்வி பிரபு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜ்குமார், செயற்பொறியாளர் நாகராஜ், நகர் மன்ற கவுன்சிலர்கள் சசிரேகா பிரபு, சிவக்குமார், புல்லட் மணி, மணவாளன், ஜனனி தங்கம், வெற்றிவேல், சாந்தராஜ், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், இளமின் பொறியாளர் வெற்றிவேந்தன், தொ.மு.ச., ரவிச்சந்திரன், தி.மு.க., நிர்வாகிகள் தாஹிர், அழகுராஜா, ஜோதி, தனபால், வேல்முருகன், செல்வராஜ், அந்தோணி, அருள்ஞானபிரகாசம், மணி, அருண், ஆனந்தகண்ணன், ஆபிரகாம் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.