/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பகுதிநேர ஆசிரியர் சங்கம் பணி புறக்கணிப்பு அறிவிப்பு பகுதிநேர ஆசிரியர் சங்கம் பணி புறக்கணிப்பு அறிவிப்பு
பகுதிநேர ஆசிரியர் சங்கம் பணி புறக்கணிப்பு அறிவிப்பு
பகுதிநேர ஆசிரியர் சங்கம் பணி புறக்கணிப்பு அறிவிப்பு
பகுதிநேர ஆசிரியர் சங்கம் பணி புறக்கணிப்பு அறிவிப்பு
ADDED : ஜூன் 21, 2025 12:39 AM

விழுப்புரம் : தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தினர், கோரிக்கையை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு குறித்து கல்வித்துறை அதிகாரியிடம் கடிதம் வழங்கினர்.
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆறுமுகம், செயலாளர் விஜயகுமார், மாநில அமைப்பு செயலாளர் இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள், விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனை சந்தித்து கடிதம் அளித்தனர்.
கடிதத்தில், சென்னையில் நடந்த பகுதிநேர ஆசிரியர்கள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், தமிழக பகுதி நேர ஆசிரியர்களுக்காக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை செயல்படுத்தாததால், இனி வரும் காலங்களில் விளையாட்டு போட்டி பணிகளில், பகுதி நேர ஆசிரியர்கள் புறக்கணிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, வரும் 2025-26 கல்வி ஆண்டில், பகுதி நேர ஆசிரியர்கள், குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் நடுவராக பணியாற்றிட மாட்டோம்.
ஆசிரியர்களுக்கு முழுமையான கால முறை ஊதியம் வழங்கும் வரை, பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து பணி புறக்கணிப்பு மேற்கொள்வர்.
வரும் ஜூலை 8ம் தேதி சென்னையில் சிறை நிரப்பும் போராட்டத்தில் திரளாக பங்கேற்போம் என அதில் தெரிவித்துள்ளனர்.