Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கூரை தகடுகள் தயாரிப்பில் முத்திரை பதிக்கும் பயோனீர் கோல்ட் ஸ்டோர் அண்ட் கிளாடிங் கம்பெனி

கூரை தகடுகள் தயாரிப்பில் முத்திரை பதிக்கும் பயோனீர் கோல்ட் ஸ்டோர் அண்ட் கிளாடிங் கம்பெனி

கூரை தகடுகள் தயாரிப்பில் முத்திரை பதிக்கும் பயோனீர் கோல்ட் ஸ்டோர் அண்ட் கிளாடிங் கம்பெனி

கூரை தகடுகள் தயாரிப்பில் முத்திரை பதிக்கும் பயோனீர் கோல்ட் ஸ்டோர் அண்ட் கிளாடிங் கம்பெனி

ADDED : செப் 30, 2025 07:54 AM


Google News
Latest Tamil News
பயோனீர் கோல்ட் ஸ்டோர் அண்ட் கிளாட்டிங் பிரைவேட் லிமிடெட் (பிசிசி) கம்பெனி, அனைத்து பருவ காலங்களுக்கும், உழைக்கும் உயர்தரமான கூரை தகடுகள், இன்சுலேடட் கூரை பேனல்கள் மற்றும் குளிர்ப்பதன கிடங்குகளுக்கு தேவையான பி.யூ.எப்., பி.ஐ.ஆர்., இன்சுலேடட் சுவர்களை உற்பத்தி செய்து வருகிறது.

இதுவரை கண்டிராத பல வண்ணங்களில் வெயில், மழை மற்றும் அனைத்து பருவ காலங்களுக்கும் ஏற்ற இன்சுலேடட் கூரை தகடுகளையும், அனைத்து விதமான உபபொருட்களையும், அதிநவீன தொழில்நுட்பத்துடன் அனுபவம் மிக்க தொழிலாளர்களையும் கொண்டு உற்பத்தி செய்து வருகிறது.

இங்கு, உற்பத்தியான பொருட்கள் இந்தியா, நேபாளம், வங்காளம் , இலங்கை, ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பயோனீர் கம்பெனியானது, (ISO 9001:2015) சான்றிதழ் பெற்ற கம்பெனியாகும்.

பிரிதமரின் தொலைநோக்கு திட்டமான 'செட் கோல்டு' தர சான்று பெற்ற நிறுவனமாகும். 'செட்' என்பது பூஜ்ஜியம் விளைவு சுற்றுப்பற சூழல்களும், பூஜ்ஜியம் குறைபாடு இல்லாத தயாரிப்பு பொருட்களும் ஆகும். பயோனீரின் ரயின் (பிசிசி) தலைமையகம் சென்னையில் மதுரவாயலில் உள்ளது.

தொழிற்சாலை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ளது. இதன் நேரடி கிளை அலுவலகங்கள் மதுரை, கோவை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் உள்ளது.

பயோனீர் கம்பெனியானது, சாயா பாலிமெர்ஸ் லிமிடெட் குழுமத்தின் ஒரு அங்கமாகும். நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக தொடர்ந்து உற்பத்தி செய்யக்கூடிய தானியங்கி செயல்திறன் பயன்படுத்தப்படுகிறது.

நவீன இயந்திரங்களைக் கொண்டு ஒரு மாதத்திற்கு 30 ஆயிரம் சதுர மீட்டர்கள் அளவில் இன்சுலேடட் பேனல்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்நிறுவனத்தின் உற்பத்திகள் ஐ.ஜி.பி.சி., சான்றிதழ் பெற்றதாகும்.

பயோனீர் கடந்த 2015ம் ஆண்டு அகில இந்திய அளவில் எஸ்.எம்.இ.,பிசினஸ் எக்சலன்ஸ் அவார்டு, 2018ம் ஆண்டு எஸ்.எம்.இ., எம்பவுரிங் இந்தியா அவார்டும், 2016-17ம் ஆண்டிற்கான தமிழக அரசின் மாநில அளவிலான சிறந்த தொழில்முனைவோர் விருது மற்றும் 2024ம் ஆண்டு எம்.எஸ்.எம்.இ., சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்டி ஆப் இந்தியாவின் அந்த ஆண்டின் தலைமை நிர்வாக அதிகாரி விருதும் பெற்றது குறிப்பிடத்தகது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us