/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வானுாரில் வளர்ச்சி திட்டப்பணிகள் முதன்மை செயலர், கலெக்டர் ஆய்வு வானுாரில் வளர்ச்சி திட்டப்பணிகள் முதன்மை செயலர், கலெக்டர் ஆய்வு
வானுாரில் வளர்ச்சி திட்டப்பணிகள் முதன்மை செயலர், கலெக்டர் ஆய்வு
வானுாரில் வளர்ச்சி திட்டப்பணிகள் முதன்மை செயலர், கலெக்டர் ஆய்வு
வானுாரில் வளர்ச்சி திட்டப்பணிகள் முதன்மை செயலர், கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 14, 2025 11:22 PM

வானுார்: வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அரசு முதன்மைச்செயலர், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டனர்.
வானுார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருச்சிற்றம்பலம் ஊராட்சி, நாவற்குளத்தில் நபார்டு திட்டத்தின்கீழ், 84 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கும் தார் சாலை பணிகளை அரசு முதன்மைச் செயலர் சுன்சோங்கம் ஜடக், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோர், அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகள்படி சாலை தரமுடன் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, ரங்கநாதபுரம் ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டை ஆய்வு செய்து, கட்டுமான பணியின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தனர்.
சேமங்கலம் ஊராட்சியில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், 11 விவசாயிகள் தரிசு நிலத்தில் சவுக்கு மரம் வளர்த்து வருவதையும் ஆய்வு செய்தனர்.
சப் கலெக்டர் வெங்கடேஷ்வரன், வேளாண் துறை இணை இயக்குநர் ஈஸ்வர், துணை இயக்குநர் சீனிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சுரேஷ்.
நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரகாஷ், வானுார் தாசில்தார் வித்யாதரன், பி.டி.ஓ.,க்கள் மணிவண்ணன், சுபாஷ்சந்திரபோஸ், திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.