Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

ADDED : மார் 18, 2025 10:36 PM


Google News
விழுப்புரம் : விழுப்புரத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 21ம் தேதி நடக்கிறது.

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நடைபெற உள்ள முகாமில், 18 வயது முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள் பங்கேற்கலாம்.

இதில், 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்த ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்று பயனடையலாம்.

முகாமில், 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று, தகுதியான 1000க்கும் மேற்பட்ட நபர்களை பணிக்கு தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு 04146-226417 மற்றும் 9499055906, 9080515682 மற்றும் 7010827725 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us