ADDED : அக் 13, 2025 12:32 AM

விக்கிரவாண்டி; பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி, வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீ பூதேவி ஸ்ரீதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீப ஆராதனை நடந்தது. உற்சவர் கோவில் வளாகத்தினுள் வலம் வந்து பின்னர் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


